"2026ல் விஜய் முதல்வராக வேண்டும்" - அண்ணாமலை மண்ணில் கிளம்பிய பரபரப்பு

x

வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை, முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டார்.

அந்த கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வெண்ணைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கரூர் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜய் விரைவில் வருகை தர இருப்பதாக கூறினார். வரும் 2026-இல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, விஜய்யை முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதே நம் நோக்கம் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்