"வழக்கம் போல திசை திருப்பாதீங்க.." - காட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள, நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கியிருப்பது தெரிய வந்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெண்கள், குழந்தைகள், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறை, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மிகவும் அதிகரித்திருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். நிதி ஆயோக் தெரிவித்துள்ளவற்றை வழக்கம் போல் திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபடாமல், மாநில நலனை மனதில் கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Next Story