தமிழக ரிசல்ட் குறித்து மோடி சொன்ன வார்த்தை - அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்
தமிழக ரிசல்ட் குறித்து மோடி சொன்ன வார்த்தை - அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத் தேர்தலில் முழு உழைப்பை அளித்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி குறிப்பிட்டிருப்பதைப் போல, வருங்காலத்தில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் மேலும் பல மடங்கு உயர்வது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்
Next Story