தமிழக தேர்தலில் அண்ணாமலை சொன்னது நடந்ததா?

x

கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, தென் சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய ஒன்பது தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள், தர்மபுரி, ராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய மூன்று தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். பாஜக 11.24 சதவீத வாக்குகளை பெற்று, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக முன்னேறியுள்ளது. 10.67 சதவீத வாக்குகள் பெற்றுள்ள காங்கிரஸ் நான்காவது பெரிய கட்சியாக உள்ளது. கோயம்புத்தூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 4.50 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன் 2.89 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் 3.66 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்