அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ
அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ | Annamalai | BJP | Viral Video
பிரதமர் மோடி, ஒடிசா பிரச்சாரத்தின்போது பேசியதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழர்கள் குறித்தான பிரதமரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சரின் எக்ஸ் பதிவை மறுபகிர்வு செய்து, அண்ணாமலை வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒடிசாவில் பிரச்சாரத்தின்போது பிரதமர் பேசியதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் முதல்வர் பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார். மக்களை இனம், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் பிளவுபடுத்துவதில், திமுக நிபுணத்துவம் வாய்ந்தது என்பதையும், அந்தப் பிரிவினையை ஒதுக்கி வைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்பதையும், முதலமைச்சருக்கு நினைவூட்ட விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.