அமைச்சருக்கு எச்சரிக்கையுடன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை

x

யூ டியூப் பேட்டியில் விமர்சித்ததாக கூறி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடைபெறுவதாக, தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் யூ டியூப் பேட்டியில் தன்னை விமர்சித்ததாக கூறி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, அண்ணாமலை சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அமைச்சர் மனோ தங்கராஜ் மானநஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாயை ஆவின் வைப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என்றும், அண்ணாமலை குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்களில் மன்னிப்பு கோரவும், மான நஷ்ட ஈடு வழங்கவும் தவறும் பட்சத்தில், சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும் எனவும் நோட்டீஸில் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்