திமுக மீது அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழகத்தில் 4 மாவட்டங்கள் மட்டுமே 32 விழுக்காடு உற்பத்தி திறன் பெற்றுள்ளதாகவும், மற்ற மாவட்டங்கள் வளரவில்லை என்றும், பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம், முசிறி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கைகாட்டி வரை, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, செல்லும் வழியில் விவசாயிகள், கோரைப்பாய் உற்பத்தியாளர்களை சந்தித்து உரையாடினார். பெண்களுக்கு தையல் மெஷின் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார். கைகாட்டியில் பொதுமக்களிடையே பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.
Next Story