"மன்னிப்பு கோர வேண்டும்" - அண்ணாமலையை தேடி வந்த பரபரப்பு நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தியதற்கு, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டுமென ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேப்படுவதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் தெரிவித்தார். இதுதொடர்பாக அண்ணாமலை சார்பில் ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது இந்த நோட்டீசுக்கு ஆர். எஸ். பாரதி சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மன்னிப்பு கோரவோ, இழப்பீடு வழங்கவோ முடியாது என்றும், வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் விஷச்சாராய விவகாரத்தில் திமுகவை தொடர்புப்படுத்தி பேசியதற்காக அண்ணாமலை மன்னிப்புக்கோர வேண்டுமெனவும், இழப்பீடாக இரண்டு கோடி ரூபாயை வழங்கி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.