``முதல்வர் அவர்களே..!'' - அண்ணாமலை பரபரப்பு பதிவு | Annamalai

x

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசால் ஏற்படுத்தப்பட்ட குலசேகரன் ஆணையத்திற்கு 6 மாத காலநீட்டிப்பை, திமுக ஆட்சிக்கு வந்ததும் தர இயலவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களின் ஊரக வளர்ச்சித் துறை உதவியுடன்தான், கடந்த 2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு சமூக, பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.

குலசேகரன் ஆணையத்திற்கு ஏன் கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை தமிழக மக்களுக்கு கூறுவதுதான் முதலமைச்சரின் தற்போதைய கடமை என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் விரும்பாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்