ஒரே பக்கமாக சாய்ந்த முடிவு - ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம்

x

விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். அப்போது, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க தேனிலவுக் காலம் எனக் கூறப்படும் ஆறு மாத காலம் பொறுத்திருக்க மாட்டோம் என்றும், அரசின் ஒவ்வொரு தவறுகளையும் உடனுக்குடன் எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார். தனது ஆட்சிக் காலத்தில் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன் என்றும், ஆனால் மக்கள் இரண்டு பட்டன்களை மாற்றி அழுத்திவிட்டனர் என்றும் கூறினார். ஆந்திர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மகாபாரத சகுனியின் தாயக்கட்டைகள் ஏற்படுத்திய முடிவுகள்போல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்