"அப்பட்டம்.. அம்பலமாகிவிட்டது" - அன்புமணி

x

தொல்லியல் பணிகளுக்கு சமஸ்கிருத‌ம் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனத்தில் தமிழை படித்தவர்கள் தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள முடியும் எனும் போது, தமிழ்நாட்டில் தொல்லியல் பணிக்கு தமிழ் போதாது, சமஸ்கிருதம் வேண்டும் என்பது அப்பட்டமான சமஸ்கிருதத் திணிப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார். இதன்மூலம், தமிழக ஆட்சியாளர்களின் தமிழ்ப் பற்றும், சமஸ்கிருத எதிர்ப்பும் போலியானது என அம்பலமாகிவிட்டதாக விமர்சித்துள்ளார். எனவே, தொல்லியல் பணிகளுக்கு தமிழை கட்டாய தகுதியாக அறிவித்து புதிய அறிவிக்கையை வெளியிட டிஎன்பிஎஸ்சிக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்