"அவன எதிர்த்தா அவ்வளவு தான்" - அன்புமணி ராமதாஸ் காரசார பேச்சு

x

குட்கா விற்பனையை இந்தியாவில் கட்டுப்படுத்திய போது, தனக்கு ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர முயற்சி நடந்ததாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில், பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில், "நாம் விரும்பும் சுற்றுச்சூழல்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி, அரசியல் தலைவர்கள் சந்தித்துக் கொண்டு பேசினால் கூட, பணம் வாங்கிவிட்டதாக விமர்சனம் செய்யும் சூழல் நிலவுவதாக வேதனை தெரிவித்தார். இதேபோல், தனக்கு வாக்களிக்காமல் போனாலும், தருமபுரி மக்களை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது என தனது தந்தை கிருஷ்ணசாமி கூறியதாக, சவுமியா அன்புமணி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்