"சுயநலத்திற்காக மாநில உரிமையை பறிகொடுப்பதா?" - டி.டி.வி தினகரன் விமர்சனம்

x

சுயநலத்திற்காக மாநில உரிமையை பறிகொடுப்பதா?" - டி.டி.வி தினகரன் விமர்சனம்

தமிழகத்திற்கான காவிரிநீரை பெறாமல் டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் நம்பிக்கைத் துரோகம் மன்னிக்க முடியாத குற்றம் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கூட்டணி தர்மத்திற்காகவும், சுய நலத்திற்காகவும் மாநில உரிமையை பறிகொடுப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு, சட்டரீதியாக உச்சநீதிமன்றத்தை அணுகுவதோடு, காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களின் மூலம் கர்நாடக அரசுக்கு அரசியல் ரீதியாக உரிய அழுத்தத்தைக் கொடுத்து தமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாகப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்