"இனி கட்சியில் இவருக்கு முழு அதிகாரம்.." - அமித்ஷா அதிரடி அறிவிப்பு | Amithsha | BJP

x

கடந்த 2019-ஆம் ஆண்டு, பாஜக தேசியத் தலைவராக அமித் ஷா இருந்தபோது, செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். 2020-ஆம் ஆண்டு, அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, கட்சியின் தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஜே.பி.நட்டாவின் பதவிக் காலத்தை ஜூன் மாதம் வரை நீட்டிக்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். அவருடைய அறிவிப்புக்கு, டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய பொதுக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் பிற்கால ஒப்புதலுக்கு உட்பட்டு, சுதந்திரமாக குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுக்க ஜே.பி.நட்டாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்