அமெரிக்காவே எதிர்பார்த்த தருணம்.. மவுனம் கலைத்தார் அதிபர்
அமெரிக்க ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான சிறந்த வழி அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைப்பது தான் என அமெரிக்க அதிபர் பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகியதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்...
அதிபர் தேர்தல் பந்தயத்தில் இருந்து விலகி கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்க முழு ஆதரவு அளித்த பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்... அப்போது தேசத்தை ஒன்றிணைக்க இதுவே சிறந்த வழி என குறிப்பிட்டார்... அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைப்பது தான் சிறந்த முடிவு என தெரிவித்த பைடன், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேசத்திற்கு சேவை செய்வது தனது பாக்கியம் என நெகிழ்ந்தார்... இங்கு சர்வாதிகாரிகள் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது... மக்கள்தான் ஆட்சியாளர்கள்... அதிகாரம் மக்கள் கையில் உள்ளது... என பைடன் தெரிவித்தார்.... பொது வாழ்க்கையில் அனுபவம் கொண்டவர்களுக்கு எப்போதும் இடம் உண்டு... அதே நேரத்தில் இளம் தலைமுறையினருக்கும் வாய்ப்பு உண்டு என குறிப்பிட்டார்... மேலும், பைடன் கமலா ஹாரிஸ் அனுபவம் வாய்ந்தவர்... திறமையானவர்... என புகழாரம் சூட்டினார்...