"உண்மைகளை பேச எங்களுக்கும் தெரியும்..?" - விளாசி எடுத்த ஈபிஎஸ்

x

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான், ராசாவின் வாடிக்கை என்று விமர்சித்துள்ளார். அவர் பேசிய பாணியில், பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும், அதிமுக அப்படி பேசாது என்று கூறியுள்ளார். வரலாறு நெடுக அதிமுக தலைவர்களை, பிம்பச்சிறையிட திமுகவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் எம்ஜிஆர் புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது என்றும், கல்லை வடித்தால் அது வெறும் சிலை - அதை மக்கள் தொழுதால் மட்டுமே தெய்வம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்