"இரட்டை இலைக்கு புது செக் துரோகி ஈபிஎஸ்-ஸோடு.." ட்விஸ்ட் வைத்த டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிச்சாமி உடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த காலத்திலும் இணைந்து பயணிக்காது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்ட அமமுக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம், டிடிவி. தினகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், துரோகிகள் கையில் சிக்கி உள்ள இரட்டை இலை சின்னத்தை, அமமுக தொண்டர்கள் விட்டு கொடுக்க மாட்டார்கள் எனவும், அதனை மீட்டெடுக்க பாடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் எனவும் கூறினார்.
Next Story