அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வழக்கு.. நீதிபதி அதிரடி உத்தரவு
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வின்சென்ட் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வின்சென்ட், உரிய அனுமதியின்றி தனது நிலத்தில் கல்லூரி கட்டடம் கட்டியதாக ஜஸ்டின் என்பவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். கடந்த 2022-ல் பதியப்பட்ட வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வின்சென்ட் வழக்கு தொடர்ந்த நிலையில், அரசியல் விரோதம் காரணமாக வழக்கு பதியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, வின்சென்ட்-க்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Next Story