ED ரெய்டு நடக்கும்போதே விஜயபாஸ்கருக்கு இன்னொரு அதிர்ச்சி..மற்றொரு வழக்கில் CBI-க்கு கிடைத்த ஒப்புதல்
குட்கா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான விசாரணைக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் புலன் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜரான வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, குற்றம் சாட்டபட்ட இருவருக்கு எதிரான நீதிமன்ற விசாரணைக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும் அவை துறை ரீதியிலான பரிசிலீனையில் உள்ளதாகவும் தெரிவித்தார். குறுக்கிட்ட நீதிபதி, எத்தனை நாட்களில் விசாரணை முடிக்கப்படும் எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விசாரணை அதிகாரி, நாட்களை உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் விரைவில் விசாரணை முடிக்கப்படும் என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல்15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்