ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி | TN Police
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் சரியாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை, அயனாவரத்தில் உள்ள இல்லத்தில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்டிராங்கை நேரில் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம்ஸ்டிராங் கொலை வழக்கை தமிழ்நாடு காவல்துறை சரியாக விசாரிப்பதாக, அவரது உறவினர்கள், கட்சியினர் கூறுவதாக தெரிவித்தார். மேலும், போலீசார் இலக்கை நோக்கி செல்வதாகவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Next Story