வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த முன்னாள் சபாநாயகரின் சகோதரரை தட்டி தூக்கிய போலீஸ்
சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர், தனது சகோதரி மகனுக்கு ஆவின் நிறுவனத்தில் மேலாளர் பதவி வாங்கித் தருவதாக, இராமதேவன்பட்டியை சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய நல்ல தம்பியிடம், 30 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட விஜய நல்லதம்பி, வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது குறித்து ரவீந்திரன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விஜய நல்ல தம்பி மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் உள்ளிட்ட ஏழு பேர் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்கில் இராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது ஆறு பேரும் ஜாமினில் வெளியே வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்பாக எந்த முன்னேற்றமும் இன்றி இருந்த நிலையில், திங்களன்று, ஸ்ரீ வில்லி புத்தூரில், விஜய நல்ல தம்பியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.