மேடையில் முற்றிய வாக்குவாதம் - கொதித்தெழுந்த நாம் தமிழர் - அதிமுக
இந்திய வர்த்தக தொழிற் குழுமம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடமிருந்து அனுமதி பெற்று, வேட்பாளர்களுக்கான விவாத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இதில், வேட்பாளர்கள் மற்றவரை தாக்கி பேசக் கூடாது எனவும், தொகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜை தவிர்த்து அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர், பாஜக வேட்பாளர் ரமேஷ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா பேசிக் கொண்டிருந்த போது, அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் தனக்கு பரப்புரை இருப்பதாகக் கூறி புறப்பட்டுச் சென்றார். இதனால் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜகவினரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றதால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது...