மாநகராட்சி கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்.. - சேலத்தில் பரபரப்பு

x

சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில், தி.மு.க. - அ.தி.மு.க கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கடைகள் மற்றும் வீடுகளுக்கான வரிகள் குறித்து தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசினர். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, மேயருக்கு எதிராக பேசத் தொடங்கியபோது, திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் மண்டல குழு தலைவர் சண்முகம் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றவில்லை எனக்கூறி, அதிமுக கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வெளிநடப்பு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்