அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகனுக்கு கொடூர தாக்குதல் - திருப்பூரில் பரபரப்பு

x

திருப்பூர் பல்லடம் அருகே சொத்து பிரச்சினையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் கவுன்சிலர் கந்தசாமிக்கும் அவரது அண்ணன் சண்முகத்திற்கும் இடப் பிரச்சினை இருந்து வந்த நிலையில் சண்முகம் இறந்து விட்டதால் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் அவரது மகள் பிரியாவிற்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியாவின் கணவரான அசோக், கந்தசாமியிடம் நிலம் தொடர்பாக தகராறு செய்து கந்தசாமியையும் அவரது மகன் இளங்கோவையும் கல்லை எடுத்து தலையில் பலமாக தாக்கிய நிலையில் இருவரும் படுகாயம் அடைந்தனர்... உடனடியாக அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்ட நிலையில் கந்தசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்