அதிமுக மாநாடு எதிரொலி.. மதுரை மக்களுக்கு புதிய அறிவிப்பு

x

இன்றைய தினம் மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை முன்னிட்டு, மதுரை மாநகருக்குள் வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது...

அதன்படி, திருச்சி மேலூர் மார்க்கமாக மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் மதுரை மாநகருக்குள் செல்லாமல் நான்கு வழிச்சாலையில் சென்று, மண்டேலா நகர் வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், வாடிப்பட்டி மார்க்கமாக மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் தனிச்சயம், துவரிமான் வழியாக கப்பலூர் சென்று, மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல், தேனி, உசிலம்பட்டி மார்க்கமாக மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் நாகமலை, புதுக்கோட்டையில் இருந்து தோப்பூர், கப்பலூர் வழியாக செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்