ஒருகை பார்க்க துணிந்த ஈபிஎஸ், மம்தா -எடுத்த முடிவால் மாறிய காட்சி ஓர் அதிர்ச்சி...ஓர் இன்ப அதிர்ச்சி
தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்காத மாநில கட்சிகள் நடந்து முடிந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன... இதுபற்றி பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
தமிழகம், புதுவையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என சொன்னபடி வெற்றி பெற்ற திமுக கூட்டணியால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன...
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த அதிமுகவால் இந்தத் தேர்தலில் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை... போதாத குறைக்கு எந்தக் கூட்டணியில் இருந்து விலகினார்களோ அதே பாஜக கூட்டணி 12 இடங்களில் 2வது இடம் பிடித்துள்ளது... அந்த இடங்களில் எல்லாம் அதிமுக வாக்குகள் மிகவும் சரிந்துள்ளன...
அதேபோல் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜின் தொடர்ச்சியான தோல்விகளால் கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது...
Next Story