அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு ஒத்திவைப்பு

x

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன் ஆகிய 3 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி உள்ளிட்ட 4 பேர் ஆஜராகவில்லை. அதற்கான காரணம் குறித்து திமுக வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்