"அரியானாவுக்கு அதானி அரசாங்கம் தேவையில்லை" - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு | Congress

x

அதானியின் வங்கி கணக்கில் சுனாமியை போல் பணம் கொட்டுகிறது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அரியானா மாநிலம் அம்பாலா பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காங்கிரசுக்கு வாக்கு சேகரித்தார்கள். அப்போது மோடி அரசாங்கம் கொண்டுவந்த வேளாண் சட்டங்களால் தங்கள் பையிலிருந்து பணம் பறிக்கப்படும் என்பதை உணர்ந்தே விவசாயிகள் எதிர்த்தார்கள் என்ற ராகுல் காந்தி, இப்போது நடப்பது மோடி அரசாங்கம் அல்ல, அதானியின் அரசாங்கம் என விமர்சித்தார். அரியானாவுக்கு அதானி அரசாங்கம் தேவையில்லை, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களுக்கான அரசாங்கமே தேவை என்றார். அதானில் நிலத்தில் உழைப்பதும் இல்லை, சிறு தொழிலும் செய்வது இல்லை, ஆனால் அவரது வங்கி கணக்கில் சுனாமி போல் பணம் கொட்டுகிறது என ராகுல் காந்தி விமர்சித்தார். மறுபுறம் மக்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறப்பதாக விமர்சித்த ராகுல் காந்தி, இப்போது நடப்பது காங்கிரஸ், பாஜக சித்தாந்த போர் என்றும் நீதியும் மற்றொரு பக்கம் அநீதியும் இருக்கிறது என்றார். ஒரு பக்கம் விவசாயிகள் ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் நலனும் மற்றொரு பக்கம் அம்பானி மற்றும் அதானின் நலன் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்