பாஜக போராட்ட கூட்டத்தை கொட்டிய தேனீ கூட்டம் - ஆளுக்கொரு திசையில் தெறித்து ஓடிய தொண்டர்கள்

x

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஆளும் காங்கிரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில்,

தேனீக்கள் திடீரென பாஜக தொண்டர்களை கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்ட ஆட்சியர் முன்பாக காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜக எம்.பி. முனுசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் ஒன்று கூடினர். போராட்டத்தில், காங்கிரசுக்கு எதிராக கோஷமிட தொடங்கிய சில நிமிடங்களில் அருகில் மரத்திலிருந்து தேன் கூட்டில் இருந்து தேனீக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடிக்க தொடங்கியது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலறி அடித்து கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடத் தொடங்கினர். தேனீக்கள் கடியால் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதனையடுத்து எம்.பி முனுசாமியும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தேனீக்கள் விரட்டப்பட்டதை அறிந்து சிகிச்சைக்கு பின் மாவட்ட உதவி ஆட்சியரை சந்தித்து ஆளும் காங்கிரசுக்கு எதிராக புகார் கடிதத்தை அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்