சுதந்திர தின விழாவில் ராகுலுக்கு நடந்த பேரதிர்ச்சி சம்பவம்.. திட்டமிட்டே மோடி செய்தாரா?

x

டெல்லி சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பின் வரிசையில் அமர்ந்திருந்த விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.

செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டார். 10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். ஆனால் விழாவில் ராகுல் காந்தி பின் வரிசையில் அமர்ந்திருந்தது சர்ச்சையாகியிருக்கிறது. நெறிமுறைப்படி, கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்துள்ள எதிர்க்கட்சி தலைவருக்கு எப்போதும் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படும். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாற, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு முன் வரிசைகள் ஒதுக்கப்பட்டதால், காங்கிரஸ் எம்.பி.க்கு இடம் மாற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர தின விழாவை நடத்துவது, இருக்கைகளை திட்டமிடுவது பாதுகாப்பு அமைச்சக பொறுப்பாகும். வாஜ்பாய் ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சோனியா காந்திக்கு முதல் வரிசையிலே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்