G 20-ல் மோடியுடன் கைகோர்த்த 4 தலைவர்கள் - காரணம் என்ன?

x

சிறப்பான மிகப்பெரிய பன்முக வளர்ச்சி வங்கியை கட்டமைக்கும் ஜி-20 மாநாட்டின் தீர்மானத்தை அமெரிக்க, தென்னாப்பிரிக்க, பிரேசில் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஜி-20 மாநாட்டை பிரேசில், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா தலைமை வகிக்க உள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் கூட்டாக குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் 4 தலைவர்களும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், உலகளாவிய சவால்களை களைய, இந்தியாவின் ஜி20 தலைமையின் வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியை கட்டமைப்போம் என கூறியுள்ளனர். சிறந்த மிகப்பெரிய அதிகம் செயலாற்றும் பன்முக வளர்ச்சி வங்கியை உருவாக்கும் ஜி20 தீர்மானத்தை உலக வங்கியின் தலைவருடன் இணைந்து வரவேற்பதாக தெரிவித்துள்ளனர். சிறப்பான எதிர்காலத்திற்காக ஒன்றாக இணைந்து பணியாற்ற உறுதியளிப்பதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்