மாநில மொழிகளை வழக்காடு மொழிகளாக கொண்டு வருவதில் சிக்கல் - தலைமை நீதிபதி என்.வி.ரமணா

மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் 11-ஆவது ஒருங்கிணைந்த மாநாடு நேற்று நடைபெற்றது.
x
மாநில மொழிகளை வழக்காடு மொழிகளாக கொண்டு வருவதில் சிக்கல் - தலைமை நீதிபதி என்.வி.ரமணா
உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழியை வழக்காடு மொழியாக்குவதில் ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் 11-ஆவது ஒருங்கிணைந்த மாநாடு நேற்று நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, பிராந்திய மொழியை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கை மிகவும் கருத்தார்ந்தது என்றார்.

பிராந்திய மொழியை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கை, குறிப்பாக தமிழகத்தில் இருந்து வருவதாக தெரிவித்த தலைமை நீதிபதி, அதற்கான முன்மொழிவு உச்சநீதிமன்றத்துக்கு வரவில்லை என்றும் கூறினார்.

வழக்கு ஆவணங்களை, ஆங்கிலத்தில் இருந்து பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கான போதுமான தொழில்நுட்பமோ, அமைப்போ நீதித்துறையில் இல்லை என்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண சிலகாலம் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்