பிரதமர் மோடியின் கருத்து - எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு

பிரதமர் மோடியின் வாட் வரி தொடர்பான கருத்துக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன...
x
பிரதமர் மோடியின் கருத்து - எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு

பிரதமர் மோடியின் வாட் வரி தொடர்பான கருத்துக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு கலால் வரியை குறைத்த போதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழகம்,தெலுங்கான உள்ளிட்ட சில மாநிலங்கள் குறைக்கவில்லை என பிரதமர் தெரிவித்திருந்தார். மேலும் மக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த மாநிலங்கள் செயல்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர், மத்திய அரசு தங்களுக்கு தரவேண்டிய கடன் பாக்கி பற்றி சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், அதே சமயம் பாஜக- போட்டியாளர்களால் ஆளப்படும் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். கோவிட் தொற்று குறித்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் ஏன் இந்த விவகாரத்தை எழுப்பவேண்டும் என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். அதே போல காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடியின் கருத்துகள் பொறுப்பற்றது என்று விமர்சித்துள்ளது.தாங்கள் எதனை குறைக்க வேண்டும் என அம்மாநில நிதி அமைச்சர் பால கோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்