“ரூ. 2 கோடி ஓவியம் வாங்கினால், பத்ம பூஷண் விருது“ - பரபரப்பை ஏற்படுத்திய பேரம்

பிரியங்கா காந்தி மீதான யெஸ் வங்கி நிறுவனரின் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி பதிலளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
x
 பிரியங்கா காந்தி மீதான யெஸ் வங்கி நிறுவனரின் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி பதிலளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார். யெஸ் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கில் அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை கைது செய்த‌து. இந்நிலையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, பிரியங்கா காந்தியிடம் இருந்த ஓவியம் ஒன்றை, 2 கோடி ரூபாய் வாங்க கட்டாயப்படுத்தப்பட்டதாக ராணா கபூர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அந்த ஓவியத்தை வாங்கினால், தனக்கு பத்ம பூஷண் விருது தருவதாக, அப்போதைய மத்திய அமைச்சர் முரளி தியோரா(Murli Deora) பேரம் பேசியதாகவும் ராணா கபூர் கூறியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், நாட்டை விற்பது மட்டுமே காங்கிரசின் வேலை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது என்றார். மேலும், ராணா கபூரின் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்