"நம் நண்பர்களை தேர்ந்தெடுக்கலாம்.. ஆனால்..?"; இந்தியா - ரஷ்யா நட்பு.. - நிர்மலா சீதாராமன் விளக்கம்

உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் தடை ஏற்பட்டுள்ளதால் மாற்று வழியை கண்டறிந்து வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
x
"நம் நண்பர்களை தேர்ந்தெடுக்கலாம்.. ஆனால்..?"; இந்தியா - ரஷ்யா நட்பு.. - நிர்மலா சீதாராமன் விளக்கம்

உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் தடை ஏற்பட்டுள்ளதால் மாற்று வழியை கண்டறிந்து வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். வாஷிங்டன் மற்றும் டெல்லியின் உறவுமுறை குறித்த கருத்தரங்கில் பேசிய அவர், உக்ரைன் போருக்கு இடையே ரஷ்யாவில் இருந்து சமையல் எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டது குறித்து விளக்கினார்.

உங்கள் நண்பரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் அண்டை வீட்டாரை தேர்வு செய்ய முடியாது என ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்புறவு குறித்து எடுத்துரைத்தார். ரஷ்யாவில் இருந்து 4 சதவீதம் மட்டுமே கச்சா எண்னெய் இறக்குமதி செய்வதாகவும், பெரும்பலான எரிபொருள் தேவை மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்தே இருப்பதாகவும் குறிப்பிட்டார். Uploaded On 23/04/2022

Next Story

மேலும் செய்திகள்