இளையராஜாவுக்கு சம்மன்... புத்தக சர்ச்சை ஓய்ந்த நிலையில் புதிய தகவல்
மத்திய அரசின் ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இளையராஜாவுக்கு சம்மன்... புத்தக சர்ச்சை ஓய்ந்த நிலையில் புதிய தகவல்
மத்திய அரசின் ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சேவை வரி கட்டாத காரணத்தால், சென்னை மண்டல அலுவலகத்தில் மார்ச் 10 ஆம் தேதி கலை 11 மணிக்கு ஆஜராகும்படி, அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது நிதி பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களையும், ஆவணங்களையும் எடுத்து வரும்படி கூறப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் இளையராஜா ஆஜராகாததால், ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையில் இருந்து மார்ச் 21 ம் தேதி மீண்டும் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. அதில், மார்ச் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவங்களுக்கு பின்னர் தான் ப்ளூ கிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனத்தின், அம்பேத்கர் அண்ட் மோடி என்ற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story