"கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார்
x
"கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

கிரிப்டோகரன்சியின் மிகப்பெரிய ஆபத்து, பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க பயன்படுத்தப்படலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து கூறியுள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கிரிப்டோகரன்சியின் மிகப்பெரிய ஆபத்து, பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க பயன்படுத்தப்படலாம் என கருத்து கூறினார். இதற்கு ஒரே ஒரு தீர்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விதிகளை ஒழுங்குப்படுத்துவதே ஆகும் என்றார். அதேநேரம் ஒரு நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தால் அது சாத்தியமில்லை என தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பரந்துப்பட்ட அளவில் ஒழுங்குமுறை விதிகள் இருந்தால் மட்டும் கிரிப்டோ கரன்சி முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும் என விளக்கம் அளித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்