பீஸ்ட் பேசும் அரசியல் என்ன? - தீவிரவாதி கைதும்... இந்திய தேர்தலும்...
பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளன.... பீஸ்ட் பேசிய அரசியல் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தலைவா... TIME TO LEAD...இதில் தொடங்கியது விஜய் படங்களின் அரசியல் சர்ச்சைகள்... அதில் இருந்து விஜய் படம் வந்தாலே, கூடவே அரசியல் சர்ச்சைகளும் வந்துவிடும்... கத்தி படத்தில் விவசாயிகள் பிரச்னையோடு, அலைக்கற்றை ஊழல் பற்றி பேசிய வசனம், மெர்சலில் ஜிஎஸ்டி குறித்து வசனம், சர்க்கார் படத்தில் இலவச திட்டங்கள் தொடர்பான காட்சிகள் என அடுத்தடுத்து அவரது படங்களில் நீண்டது அரசியல் சர்ச்சை... இதோடு ஆடியோ லாஞ்சுகளில் விஜயின் அரசியல் பேச்சுகளுக்கு அரசியல் சர்ச்சைகளில் தனி இடம் உண்டு... தற்போது பீஸ்ட் படம் ஆடியோ லாஞ்ச் இல்லாமல் திரையரங்கிற்கு வந்தாலும், படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் இப்போதே பேசுபொருளாகியுள்ளன..மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில், பீஸ்ட் படத்தின் ஒரு காட்சியில், 'உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா, எல்லா தடவையும் இந்தியை TRANSLATE பண்ணிட்டு இருக்க முடியாது என பேசியது கவனம் பெற்றுள்ளது... இதுமட்டுமல்ல, "ஒரு மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது... பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதியை பிடித்து வருகிறேன் என பிரதமரிடம் கூறுங்கள், எங்களை தாமாக முன்வந்து நாட்டிற்குள் வர அனுமதிப்பார் என பாகிஸ்தான் வான் எல்லையில் இருந்து விஜய் பேசும் வசனமும் கவனம் பெற்றுள்ளது. இப்படி, படத்தில் இந்தி மொழி, தீவிரவாதம், ரஃபேல் போர் விமானம் தொடர்பான வசனங்கள் மூலம் அரசியல் பேசுகிறது விஜயின் பீஸ்ட்...
Next Story