மக்களவையில் பெண் எம்பியுடன் ஜாலி அரட்டை... வைரல் வீடியோ - இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்கள்!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர், பெண் எம்பியுடன் பேசும் வீடியோ இணையத்தில் மீம்ஸ்களாக பகிரப்பட்டு வருகிறது.
x
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர், பெண் எம்பியுடன் பேசும் வீடியோ இணையத்தில் மீம்ஸ்களாக பகிரப்பட்டு வருகிறது. மக்களவையில் உக்ரைன், ரஷ்யா போர் குறித்து ஜம்முகாஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பேசி கொண்டிருந்தார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த தசி தரூர் தனது இருக்கையில் முகத்தை தாழ்த்தி முன்னாள் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பியான சுப்ரியா சுலேவ் உடன் ஆர்வமாக எதையோ பேசிக் கொண்டிருந்தார். ஃபரூக் அப்துல்லாவின் பேச்சை அவை உறுப்பினர்கள் கேட்டு கொண்டிருந்த போது தசி தரூர் பெண் எம்பியுடன் பேசியதை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். தனது வீடியோ இணையத்தில் பகிரப்படுவதை தொடர்ந்து விளக்கம் அளித்த சசி தரூர், தான் பேச உள்ள குறிப்பு குறித்த சந்தேகத்தை சுப்ரியா சுலேவ் கேட்டதாகவும், அதற்கு பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்