"சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜக போராடும்" - பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி
சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா தொடர்ச்சியாக போராடும் என்று, தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா தொடர்ச்சியாக போராடும் என்று, தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக அலுவலகம் கமலாயத்தில் பாஜக-வின் 43வது தொடக்க நாள் விழா நடைபெற்றது. விழாவில் சுதாகர் ரெட்டி கலந்துக் கொண்டு, கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், தமிழகத்தில் சொத்து வரி 150 சதவீதம் உயர்ந்து இருப்பதாகவும், வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெறும் வரை பாஜக தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் குற்றச்சாட்டினார்.
Next Story