"நல்ல உள்நோக்கத்துடன் சட்ட திருத்தம்...தன்னாட்சி சுதந்திரத்தில் தலையிடுவதற்காக அல்ல" - தம்பிதுரை எம்.பி பேச்சு
மாநிலங்களவையில் உரையாற்றிய அதிமுக எம்.பி தம்பிதுரை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க பட்டயக் கணக்காளர்கள் அமைப்பை ஒழுங்கு படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
மாநிலங்களவையில் உரையாற்றிய அதிமுக எம்.பி தம்பிதுரை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க பட்டயக் கணக்காளர்கள் அமைப்பை ஒழுங்கு படுத்த வேண்டியது அவசியம் என்றார். இதற்காக மத்திய அரசு நல்ல உள்நோக்கத்துடன் சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருப்பதாக அவர் கூறினார். எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியது போல தன்னாட்சி சுதந்திரத்தில் தலையிடுவதற்காக அல்ல என்றும் தெரிவித்தார். மேலும், இத்தகைய சட்டத் திருத்தங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடைபெற்றதாகவும், திருத்தங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறினார். பட்டய கணக்காளர்களுக்கு சமமாக, அலுவலர்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தார்.
Next Story