நிறுவன செயலாளர்கள் திருத்த மசோதா! மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி வில்சன்!

மாநிலங்களவையில் பட்டய கணக்காளர்கள், பணியாளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி வில்சன்...
நிறுவன செயலாளர்கள் திருத்த மசோதா! மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி வில்சன்!
x
மாநிலங்களவையில் பட்டய கணக்காளர்கள், பணியாளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி வில்சன், பட்டய கணக்காளர்கள் நிறுவன செயலாளர்கள் உள்ளிட்டவற்றின் ஒழுங்கு நடவடிக்கை  குழுக்களை மாற்றி அமைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது என தெரிவித்தார். பட்டய கணக்காளர்கள் உள்ளிட்ட இதர நிர்வாக குழுக்களில் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்பை குறைக்க இந்த மசோதாவில் வழிவகை செய்வதாகவும் தெரிவித்தார்.
ஒழுங்கு நடவடிக்கை யின் நிர்வாக குழுவில் தொழில்முறை சாராத இதர உறுப்பினர்களை நியமிப்பது அந்த அமைப்புகளின் தன்னாட்சி சுதந்திரத்தில் சமரசம் செய்து கொள்ளும் செயல் எனவும்  ஒழுங்கு நடவடிக்கை குழுவை மத்திய அரசு ஏன் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வில்சன் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்