போலீசாருடன் 2 மணி நேரம் ஹெச்.ராஜா கடும் வாக்குவாதம் - புதுக்கோட்டையில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காட்டில் வீடு கட்ட அனுமதி பெற்ற இடத்தில் மசூதி கட்டியுள்ளதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காட்டில் வீடு கட்ட அனுமதி பெற்ற இடத்தில் மசூதி கட்டியுள்ளதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் இடை மறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்த ஹெச் ராஜா, சாலையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தமிழக அரசு 13 ஆம் தேதி தமிழக அரசு கட்டிடத்தை அகற்றும் என எழுத்துப்பூர்வமாக அளித்த உறுதியை அடுத்து அவர் கிளம்பிச் சென்றார்.
Next Story