"கோதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்திடுக" - மத்திய அரசுக்கு திமுக எம்.பி. ஞான திரவியம் கோரிக்கை

கோதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க மத்திய அரசு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு திமுக எம்பி ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்திடுக - மத்திய அரசுக்கு திமுக எம்.பி. ஞான திரவியம் கோரிக்கை
x
கோதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க மத்திய அரசு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு திமுக எம்பி ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளார். 
மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய அவர், தாமிரபரணி நதியின் ஒரு சிறு கிளையான கோதையாறு வடக்கு கோதையாறாக 959 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி தெற்கு கோதையாற்றுடன் சமவெளி பகுதியில் கலப்பதாக குறிப்பிட்டார்.
இந்த நதியில் மழைக் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் ஏற்படுவதால் அதிகப்படியான நீர் கடலில் கலப்பதாகவும் இதனை தடுக்க தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு கோதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்து தண்ணீர் வழங்குவதே தீர்வாக அமையும் எனக் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்