சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு சாத்தியமா?

தேர்தல் அரசியலில் சமூக வலைதளங்களின் தலையீட்டுக்கு முடிவு கட்டுங்கள் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ள நிலையில், இது சாத்தியமா?
சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு சாத்தியமா?
x
தேர்தல் அரசியலில் சமூக வலைதளங்களின் தலையீட்டுக்கு முடிவு கட்டுங்கள் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ள நிலையில், இது சாத்தியமா?  

நமது அன்றாட வாழ்வில் அங்கமாக மாறியுள்ளன சமூக வலைதளங்கள்.

பொது போக்கு, தகவல் பகிர்வு நோக்கத்திற்காக வந்த தளங்கள், இன்று ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் ஆயுதமாகவும் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத குற்றச்சாட்டாக இருக்கிறது. 

வல்லரசான அமெரிக்காவிலேயே சமூக வலைதளங்களில் செய்யப்பட்ட மாயாஜாலங்கள், 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனின் வெற்றியை பறித்து ஆட்சியை டிரம்பிடம் கொடுத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. 
 
இந்தியாவில் தற்போது தேசிய கட்சிகள் தொடங்கி உள்ளூர் அளவிலான கட்சிகள் வரையில் அனைத்து கட்சிகளும் தங்களுக்கென தனி ஐ.டி.பிரிவையே உருவாக்கி ஆக்டிவாக செயல்படுகின்றன.  

தேர்தல் நெருங்கும் வேளையில் அதே அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களையும் அள்ளி வீசுகின்றன. அவ்வாறு அரசியல் கட்சிகள் வெளியிடும் விளம்பரத்திற்கு சமூக வலைதள நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. 2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் 53 கோடி ரூபாய் அளவிற்கு சமூக வலைதளங்களில் விளம்பரங்களை வெளியிட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த தேர்தலிலும், இந்த தேர்தலையொட்டி நடந்த பிற சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜக வெளியிட்ட விளம்பரத்திற்கு பேஸ்புக் நிறுவனம் கட்டண சலுகை வழங்கியுள்ளது என வெளியான செய்தியே நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது. சமூக வலைதளங்கள் இந்திய ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அதனை தடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியிருக்கிறார். 

தேர்தலின் போது மக்கள் மனதை யாரும் ஒருதலை பட்சமாக வளைத்துவிட கூடாது என்றுதான் சாலையோர சிலைகள் எல்லாம் மூடப்படுகின்றன. போஸ்டர்கள் எல்லாம் கிழிக்கப்படுகின்றன. ஆனால், சமூக வலைத்தளங்களோ எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெறுப்பையும் ஒரு பக்க சார்பையும், ஒரு சின்ன வீடியோ மூலமாக வாக்காளர்கள் கண் முன்னே கொண்டு சென்று விடுகின்றன. 

எனவேதான் தற்போது சமூக வலைதள பிரசாரமும் மாவட்ட அளவில் கண்காணிக்கப்படுகிறது. வேட்பாளர்கள் தங்களுடைய சமூக வலைதள கணக்கு, அதில் செய்யும் விளம்பர செலவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. 

இப்படிப்பட்ட சூழலில் சமூக வலைதளங்களின் தேர்தல் தலையீட்டுக்கு முடிவு கட்டுவது அவ்வளவு எளிதல்ல என்றே கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்