"தேர்தல் அரசியலில் சமூக வலைதளங்கள் ஆதிக்கம்" - காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி

மக்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய சோனியா காந்தி, பேஸ்புக் உள்ளிட்ட சர்வதேச சமூக வலைத்தளங்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டினார்.
x
மக்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய சோனியா காந்தி, பேஸ்புக் உள்ளிட்ட சர்வதேச சமூக வலைத்தளங்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டினார். ஜனநாயகத்ததில் ஊடுருவ சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப் படுவதால் ஆபத்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட உலகளாவிய சமூக வலைத்தளங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் போன்றோரின் அரசியல் கதைகளை வடிவமைக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். ஆளும் கட்சிகளின் உடந்தையுடன் முகநூலில் அப்பட்டமான முறையில் சமூக நல்லிணக்கத்தில் இடையூறு ஏற்படுத்தபடுவதாக குற்றம் சாட்டிய சோனியாகாந்தி, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் அரசியலில் ஆதிக்கம் மற்றும் குறுக்கீடு செய்வதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்