"தி காஷ்மீர்ஃபைல்ஸ் படத்தை தடை செய்ய வேண்டும்" - அஸ்ஸாம் எம்.பி. பக்ருதின் அஜ்மல் கோரிக்கை

ஒற்றுமையை கெடுக்கும் என்பதால், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அஸ்ஸாம் எம்.பி. பக்ருதின் அஜ்மல் கோரியுள்ளார்.
x
ஒற்றுமையை கெடுக்கும் என்பதால், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அஸ்ஸாம் எம்.பி. பக்ருதின் அஜ்மல் கோரியுள்ளார். காஷ்மீரில் இருந்து இந்துக்கள் வெளியேற்றம் குறித்து தி காஷ்மீர் பைல்ஸ் படம் பேசுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, படத்தை தாம் பார்க்கவில்லை என கூறியுள்ள எம்.பி. பக்ருதின் அஜ்மல், காஷ்மீரில் பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்தவை என்றும், அந்த பதற்றமான சூழல் தற்போது இந்தியாவில் இல்லை என்றும் கூறியுள்ளார். அஸ்ஸாமில் நடைபெற்ற நெல்லி விவகாரத்தை படம் எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளா அவர், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ள தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்