நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றைய முக்கிய அம்சங்கள் என்ன ?

மக்களவையில் ஊரக மேம்பாடு உணவு பதப்படுத்துதல் உள் துறை வேளாண் துறை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார் அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்கின்றனர்.
x
மக்களவையில் ஊரக மேம்பாடு உணவு பதப்படுத்துதல் உள் துறை வேளாண் துறை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார் அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்கின்றனர். உக்ரேனின் நிலவும் சூழல் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மக்களவையில் இன்று அறிக்கை அளிக்கிறார்.
மேலும் கடந்த மார்ச் 09 ம் தேதி கவனக்குறைவாக ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிக்கை அளிக்கிறார்.
மேலும் மக்களவை பொருத்தவரை ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
மேலும் திரிபுரா மாநிலத்தில் குறிப்பிட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வழி வகை செய்யும் பழங்குடியினர் அரசியலமைப்பு திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்