காங்கிரஸ் இடத்தை பிடித்த ஆம் ஆத்மி..!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப்பில் களமிறங்கிய ஆம் ஆத்மி 4 தொகுதிகளுடன் 24.40 சதவீத வாக்குகளை கைப்பற்றியது.
x
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப்பில் களமிறங்கிய ஆம் ஆத்மி 4 தொகுதிகளுடன் 24.40 சதவீத வாக்குகளை கைப்பற்றியது. 2017 சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளை ஆம் ஆத்மி பிடித்தாலும் வாக்கு வங்கி 23.7 சதவீதமாக குறைந்தது. இது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 7.38 ஆக சரிந்தது. தற்போது 92 இடங்களில் வென்றிருக்கும் அக்கட்சியின் வாக்கு வங்கி ஜெட் வேகத்தில் உயர்ந்து 42 சதவீதமாகியிருக்கிறது. மறுபுறம் ஆட்சியை பறிகொடுத்திருக்கும் காங்கிரஸ் 2014 நாடாளுமன்ற தேர்தலில் 33.10 சதவீத வாக்குகளை பிடித்திருந்தது. இந்த எண்ணிக்கை 2017 சட்டப்பேரவை தேர்தலில் 38.64 சதவீதமாக இருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40.12 சதவீதமாக அதிகரித்தது. ஆனால் இப்போது காங்கிரஸ் வாக்கு வங்கி 23 சதவீதமாக சரிந்துள்ளது. சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் வாக்கு வங்கியும் குறிப்பிட்ட தேர்தல்களில் முறையே 26.30 சதவீதம், 33.2 சதவீதம், 27.45 சதவீதம், 18.38 சதவீதம் என ஏற்றத்தாழ்வை கண்டிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்