உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
x
403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 
இதில் ஆளும் பாஜக கூட்டணி, சமாஜ்வாதி கூட்டணி , பகுஜன் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. 
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து  முதலிடத்தில் இருந்த பாஜக  270க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி 
பாஜகவுக்கு அடுத்தபடியாக 125 இடங்களில் சமாஜ்வாதி கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தாலும், தேர்தல் முடிவுகள் காங்கிரஸிற்கு  பெரும் சரிவை கொடுத்துள்ளது.பகுஜன் சமாஜ்வாதி ஒரு இடத்தையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு உத்தரபிரதேச தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 312 இடங்களை கைப்பற்றி யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி அமைத்தது குறிப்பிட்டத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்